நாட்டின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் இணையங்கள் ஊடாக குற்றங்களை விசாரணை செய்வதற்காக சைபர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்குமாறு தேசிய பாதுகாப்புத் துறை தொடர்பான மேற்பார்வைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன், நாட்டிலுள்ள 43 பிராந்திய பொலிஸ் பிரிவுகளிலும் சிவில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்றும் அக் குழு யோசனை முன்வைத்துள்ளது.
இந்தப் பரிந்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜெயதிலக்க தலைமையிலான தேசிய பாதுகாப்புத் துறை தொடர்பான மேற்பார்வைக் குழுவே நாடாளுமன்றுக்கு வழங்கியுள்ளது.
அத்துடன் சைபர் பாதுகாப்பு உத்தியோகத்தரின் நடவடிக்கைகள் பொலிஸ் தலைமையகத்தின் அந்தந்த பிரிவுகளுடன் நெட்வேர்க் செய்ய அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை சைபர் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு தகவல் தொழில்நுட்பத்தில் உயர் டிப்ளோமா பெற்றவர்களே நியமிக்கவேண்டும் என்றும் தேசிய பாதுகாப்புத் துறை தொடர்பான மேற்பார்வைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இந்த ஆள்சேர்ப்பு அடுத்த தேர்தலுக்கு முன்பே இடம்பெறவேண்டும் என்றும் அக்குழு வலியுருத்தியுள்ளது