ஈரானில் கொரோனா வைரஸ் பரவும் மையப்புள்ளியான கோம் நகரில் உள்ள வழிபாட்டுத் தலத்தின் அரண்களை சிலர் நாவால் நக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர வைத்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 53 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் 43 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரானின் கோம் நகரம் வைரஸின் மையப்புள்ளியாக இருக்கிறது. கோம் நகரின் எம்.பி உட்பட பல அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நகரில் இருக்கும் மத வழிபாட்டுத் தலத்திலிருந்து வைரஸ் பலருக்கு பரவியதாக கூறப்படுகிறது. எனினும், அதிகாரிகள் வழிபாட்டுத் தலங்களை மூட மறுக்கின்றனர்.
இந்நிலையில், குறித்த வழிபாட்டுத் தலத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தொட்டு வழிபட்ட அரண்களை, ஈரான் அரசிற்கு ஆதரவான சிலர் நாவால் நக்கி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள், தங்கள் குழந்தைகளை கூட வற்புறுத்தி நக்க வைத்த வீடியோக்களும் வெளியாகியுள்ளன. குறித்த அரண்கள் கிருமிகளை அழிக்கும் என மதகுரு கூறியதாக உள்ளுர் வாசிகள் தகவல் தெரிவிக்கின்றன.
நான் இதை நக்குகிறேன், என்ன நடந்தாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு பின்னால் வழிபாடு நடக்கிறது. கொரோனா வைரஸ் குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை என அரணை நக்கும் ஒருவர் கூறுகிறார்.
மற்றொருவர், இந்த வழிபாட்டுத் தளத்திலிருந்து தான் கொரோனா பரவுவதாக மக்கள் சிலர் கூறுகின்றனர். நான் இப்படி தான் வைரஸை அழித்தேன். நீங்களும் இங்கே வரலாம் என கூறி அரணை நக்குகிறார். பின் அவரது மகனையும் நக்க வைக்கிறார்.
https://twitter.com/AlinejadMasih/status/1233783635007954949