ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் நாட்டின் பாதுகாப்பை தற்போது உறுதிப்படுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
மேலும் ஒவ்வொரு வாரமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலும் பாதுகாப்புக் கூட்டமும் நடத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் தமது பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் அதற்கும் ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.