தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.
இவர் நடிகர் சரத்குமாரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை நாம் அறிவோம். சரத்குமார் அவர்களின் முதல் மனைவியின் மகள் வரலட்சுமி சரத்குமார்.
வரலட்சுமி அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் பல விஷயங்களை பற்றி பேசி வந்தார். அதில் குறிப்பாக “நான் ராதிகா அவர்களை ஆண்ட்டி என்று தான் அழைப்பேன் ஏனென்றால் அவர்கள் எனது தாய் கிடையாது. அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி, எனக்கு தாய் என்றால் அது ஒருவர் மட்டும் தான். ஏன் அனைவருக்கும் ஒரே ஒரு தாய் தான். மேலும் அதனால் அவர் எனக்கு அம்மா கிடையாது, அவர் எனக்கு ஆண்ட்டி தான். நான் அவரை எனது தந்தை சரத்குமார் அவர்களுக்கு ஈடாக மரியாதையை வைத்து இருக்கிறேன் என்று அதிரடியாக பேசினார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.