பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் ஸ்ரீ ரஞ்சனி. இவர் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் மற்றும் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும், இவர் அதே தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகனாக நடித்து வந்த அமித் பார்கவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைப்பதற்கு தீவிரமாக உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளார்.