உலகநாடுகளெல்லாம் கொரோனா வைரஸ் பீதியில் நடுங்கிக்கொண்டிருக்க, வட கொரியாவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல், புதிய ஏவுகணை சோதனையை நடத்துவதில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளது.
குறுகிய தூரம் சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட,பாலிஸ்டிக் வகை ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியதாகஅண்டை நாடான தென் கொரியா தகவல் வெளியிட்டு உள்ளது.
ஜப்பானை ஒட்டி உள்ள வட கொரியாவின்கிழக்கு கடற்கரை பகுதியில் இரு ஏவுகணைகளை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ராணுவ பலத்தை உலக நாடுகளுக்கு பறைசாற்றி வரும் வட கொரியா, இந்த ஏவுகணை சோதனையின் மூலம் உலகின் சக்தி மிகு வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு எச்சரிக்கை செய்திருப்பதாக கருதப்படுகிறது.