வைரஸ் பரவுவதை தடுக்க பிரித்தானியா நகரங்கள் முற்றாக முடக்கப்படும் என சுகாரார செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 36-ஐ எட்டியுள்ளது.
வைரஸ் பரவுவதை தடுக்க 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடுவதற்கு ஐரோப்பா நாடான பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ஊடக நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட பிரித்தானியா சுகாதரா செயலாளர் ஹான்காக்யிடம், சீனாவில் நகரங்கள் முடக்கப்பட்டது போல் பிரித்தானியாவில் நகரங்கள் முடக்கப்பட வாய்ப்புள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஹான்காக், நகரங்களை முடக்குவதால் பெரிய பொருளாதார மற்றும் சமூக பின்னடைவு ஏற்படும். ஆனால், தற்போதுள்ள சூழலில் எதையும் தேவையில்லை என நாங்கள் ஒதுக்க வைக்கவில்லை.
ஏனெனில், தேவையான அனைத்து உத்திகளும் நம்மிடம் தயாராக இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் நான் சமூக மற்றும் பொருளாதார சீர்குலைவைக் குறைக்க விரும்புகிறேன்.
இப்போதைக்கு நகரங்களை முடக்கும் திட்டமில்லை. ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை கொடுக்கப்படும். தடுப்பூசி உருவாக்கப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன.
கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவினால் பிரித்தானியா அதை எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய, அதற்கு தேவையான அவரசரகால சக்திகள் குறித்து அமைச்சர் இந்த வாரம் ஆய்வு செய்வார்.
நிலைமை மிக மோசமானால் பிரித்தானியா நகரங்களை முற்றாக முடக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியா சுகாதார செயலாளர் ஹான்காக் தெரிவித்துள்ளார்.