சீன நாட்டில் உள்ள வுகான் நகரினை மையமாக வைத்து பரவிய கரோனா வைரஸ் உலக நாடுகளை பெருமளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கரோனா 67 நாடுகள் வரை தற்போது பரவியுள்ளது.
கரோனா வைரஸிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3053 ஆக அதிகரித்துள்ள நிலையில், சீனாவில் மட்டும் 2870 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதுமாகவே சுமார் 42 ஆயிரத்து 609 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாதாரண பாதிப்புடன் காணப்பட்ட 35 ஆயிரம் பேர் குணப்படுத்தப்பட்ட நிலையில், 42 ஆயிரத்து 728 பேர் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான், ஜெர்மனி, சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது.
ஈரானில் தற்போதுவரை 54 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இத்தாலியில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இத்தாலி நாட்டில் சுமார் 12000 க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் கரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், இத்தாலியில் இருந்து வெளியேற இயலாமல் சும்மர் 85 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அங்குள்ள இத்தாலி பாவியா நகரில் உள்ள பல்கலைகழகத்தில் பயின்று வரும் நிலையில், பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளித்துள்ளதால் விடுதிகள் மற்றும் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, உணவுப்பொருட்கள் பிரச்சனை போன்றவை அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
85 மாணவர்களில் 15 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ள நிலையில், இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.