எங்களுக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை என்றோ அல்லது சுயலாபங்களுக்காகவோ நாங்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கல்வியங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
சுமந்திரன் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. ஒரு விடயத்தை நான் மிகவும் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலபேர் போட்டியிட்டிருந்தார்கள். அதில் சில பேர் வெற்றி பெற்றிருந்தார்கள். வட மாகாணசபைத் தேர்தலில் நான்கு கட்சிகள் மிக முக்கியமாக போட்டியிட்டு இருந்தன.
ஆகவே அந்த அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஆக, அந்த வகையில் நாங்கள் ஒரு அமைச்சர் பதவியை கேட்பது என்பது தவறானதல்ல . நாங்கள் கேட்டது அரசியல் விஞ்ஞானத் துறையில் ஒரு டாக்டர் பட்டம் பெற்று விரிவுரையாளராக இருந்த சர்வேஸ்வரனுக்கு ஒரு கல்வி அமைச்சர் பதவியை. அரசியல் துறையில் பல்வேறு அனுபவங்களை கொண்ட சர்வேஸ்வரனுக்கு ஒரு அமைச்சர் பதவியைக் கேட்பது என்பது தவறான விடயம் அல்ல.
ஆகவே நாங்கள் முழு தகுதியும் உடைய ஒருவருக்கு அந்தப் பதவியை கேட்டிருந்தோம். நிராகரிக்கப்பட்டது என்பது ஒரு தவறான விடயம் என்பது தான் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஆகவே அதனை ஒரு மெல்லினப்படுத்தி ஒரு சகோதரருக்காக அமைச்சுப்பதவி கேட்கப்பட்ட விடயம், முன்னரும்ம் சொல்லப்பட்டது தற்பொழுது தேர்தலை மையப்படுத்தி இவ்வாறான பொய்யான பரப்புரைகளை சுமந்திரன் பரப்பி வருகின்றார்.
ஆகவே நான்கு கட்சிகளுக்குமாக ஒவ்வொரு அமைச்சர் பதவி என்பதும் ஒதுக்கப்பட்டது, ஆகவே அந்த அமைச்சர் பதவிகளை நான்கு கட்சிகளும் ஒன்றாக பேசி எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அது அவ்வாறு இல்லாமல், அன்று அரசியலுக்கு புதிதாக இருந்த விக்னேஸ்வரன் மீது குற்றச்சாட்டுகளை முன் நிறுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
கடந்த காலத்தில் தமிழரசுக் கட்சியினுடைய சில விடையங்கள் சுமந்திரனின் கையை முன்னோக்கி எடுத்து செல்லப்பட்டது என்பது முக்கியம்.
இன்று அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றவாறு, விக்னேஸ்வரன் மீது பொறுப்புகளை கூறி தப்பிக்க பார்ப்பது என்பது, ஏற்புடைய ஒரு விடயம் என்பது உண்மைக்கு நிகரானது எனவும் அவர் தெரிவித்தார்.
இரண்டாவது விடயம் நாடாளுமன்றத்தில் உள்ள தேசியப்பட்டியலை நாங்கள் கேட்டதாகவும் அது கொடுக்காத காரணத்தினால் வெளியேறியதாகவும், கூறுகின்ற விடயம் மோசமான ஒரு பிழையான செய்தி என்பதையும் நான் தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
2015ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு கட்சிகளும் ஒன்றாக இணைந்து போட்டிருந்தது. அதில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன.
நான்கு கட்சிகள் ஒன்றாக போட்டியிட்டு அதன் காரணமாகவே அந்த வாக்குகள் கணிசமான அளவில் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஆனால் அது தமிழரசுக்கட்சிகுரிய வாக்குகள் அல்ல. ஈபி ஆர் எல் எஃப் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் தமிழீழ விடுதலை இயக்கம் கட்சிக்கு கிடைத்த வாக்குகள், புளட் கட்சிக்கு கிடைத்த வாக்குகள், ஆகவே எங்களுடைய கூட்டு முயற்சியின் காரணமாக தான் சில லட்சம் வாக்குகள் அப்பொழுது எங்களுக்கு கிடைக்கப் பெற்றிருந்தன.
அப்பொழுது எங்களுடைய கூட்டு முயற்சியால் தான் அதிகளவான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அந்த அடிப்படையில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள், எங்களுக்கு கிடைத்த பொழுது அந்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒன்று தமிழரசுக் கட்சிக்கும், மற்றைய ஆசனத்தை மூன்று கட்சிகளுக்கும் ஒரு கால வரையறையை வகுத்து செயற்படுத்தி எங்களுக்கும் அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன் நிறுத்தப்பட்டு இருந்தது.
அந்தக் கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீகாந்தா, நான் போன்றோர் கலந்து கொண்டிருந்தோம் நாங்கள் கூட்டாக போட்டியிட்டு அதன் காரணமாக அந்த தேசியப்பட்டியல் ஆசனத்தில் ஒன்றை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்பதில் எந்த தவறும் இல்லை.
தற்பொழுது சுமந்திரன் நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி பொய்யான கருத்துக்களை மேடைகளில் பேசி வருகின்றார். சில சட்டத்தரணிகள் வழக்குகளுக்காக பொய் பேசுவார்கள். அதில் சுமந்திரன் இன்னும் நன்றாக பொய் பேசக்கூடியவர்.
எனவே கிளிக்க படவேண்டியது எங்களது முகத்திரை அல்ல சுமந்திரன் போன்றவர்களின் முகத்திரையே எதிர்வரும் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தினை அவர்களுக்கு புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.