தகவல் பரிமாற்றத்திற்காக இணையதளங்கள் மூலம் தற்போது உடனடியாக தகவலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வசதி வந்து கொண்டேதான் இருக்கிறது. அதிலும் தற்போது முக்கித்துவம் வாய்ந்ததாக டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியுப் போன்றவை உலக மக்கள் அதிகமாக உபயோகம் செய்யப்படும் சமுகவலைத்தளங்கள்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களிடன் உறவையும், செய்தியையும் பரிமாறிக்கொள்ள இந்திய பிரதமரும் சமுகவலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார். கோடிக்கணக்கான மக்கள் அவரது இணையதள கணக்குகளை பின்பற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அனைத்துவித சமுகவலைத்தளத்தில் இருந்தும் வருகிற ஞாயிற்று கிழமையோடு விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை பார்த்த பிரபலங்களும், மக்களும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் மோடியை எதிர்ப்பவர்களும் பல்வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்திய மக்கள் சிலர் அதனை மீம்ஸ் செய்தும் கருத்துகளை தெரித்து வருகிறார்கள்.
சமுகவலைத்தளத்தில் இருந்து திடீர் விலக பிரதமர் முடிவெடுத்திருப்பது என்ன காரணத்திற்க்காக இருக்கும் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
This Sunday, thinking of giving up my social media accounts on Facebook, Twitter, Instagram & YouTube. Will keep you all posted.
— Narendra Modi (@narendramodi) March 2, 2020