மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் நேரம். அப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா.
அதன்பின் ராஜா ராணி , நையாண்டி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும், கடந்த 2014ல் இவருக்கும் நடிகர் ஃபகத் பாசலுக்கும் திருமணமாகியது. திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் நஸ்ரியா. தற்போது தனது கணவருடன் இணைந்து ’டிரான்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் டிரான்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருவருகிறது. இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் சர்ச்சைக்குரிய விதமாக நடிகை நஸ்ரியா புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு தன் கணவருடன் சேர்ந்து நடிக்கும் படத்திலேயே புகைப்பிடிக்கும் காட்சிகள் அமைந்திருப்பதை கண்டு ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
https://twitter.com/Nazriya4U_/status/1234468183312158720