சிபி சக்கரவர்த்தி
கடந்த 2022 -ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூலில் பாட்டையே கிளப்பியது.இப்படத்தை அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார்.
இப்படத்தின் மூலமாக பிரபல இயக்குனராக மாறிய சிபி சக்கரவர்த்தி, ரஜினிகாந்த் மற்றும் நானிக்கு கதை சொன்னதாகவும் அந்த கதை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல் வெளிவந்தது.
ஹீரோயின்?
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் உடன் சிபி சக்கரவர்த்தி மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளாராம்.
அதற்கான பேச்சு வரத்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தின் பணிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.