தீபக்-நக்ஷ்த்ரா
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்த தொடர் தமிழும் சரஸ்வதியும்.
இந்த தொடர் மூலம் புதிய ஜோடியாக இணைந்து நடித்தவர்கள் தீபக் மற்றும் நக்ஷ்த்ரா. தீபக் பற்றி நமக்கே நன்றாக தெரியும், விஜய், சன் மற்றும் ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றி இருக்கிறார். தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகராக வலம் வந்துள்ளார்.
அதேபோல் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி பின் நடிகையாக களமிறங்கியவர் நக்ஷ்த்ரா.
கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தமிழும் சரஸ்வதியும் தொடரில் நாயகியாக நடித்து வந்தார், தற்போது தொடரும் முடிந்துவிட்டது.
புதிய கார்
இந்த நிலையில் நடிகை நக்ஷ்த்ரா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அவர் புதிய காருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
View this post on Instagram