வீட்டிற்கு அழகு சேர்க்கும் மணி பிளான்ட் வாஸ்து படி, அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது, இது ஒரு உட்புற தாவரம் என்ற வகையில் மிகவும் மங்களகரமானது.
வாஸ்து சாஸ்திரத்திலும் இந்த தாவரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதேப் போல் வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருட்களும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி இருக்க வேண்டும்.
தவறான திசையில் பொருட்கள் வைக்கப்பட்டால், அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க வைக்கும். எனவே எந்த ஒரு பொருளை வீட்டில் வைப்பதாக இருந்தாலும், அவற்றை வாஸ்து பார்த்து வைக்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
அந்தவகையில் வீட்டில் மணி பிளாண்டை எந்த திசையில் வைத்தால் செல்வ செழிப்பு அதிகரிக்கும் எனவும் எந்த திசையில் வைப்பதால் பணப்பிரச்சினை அதிகரிக்கும் எனவும் இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த திசையில் வைப்பது சிறந்தது?
மணி பிளாண்ட் ஒருவரது வீட்டின் நிதி நிலையை அடையாளப்படுத்துவதாக அமைகின்றது. இதனால் தான் பலர் நிதி நெருக்கடியை சமாளிக்கவும் செல்வ செழிப்பு அதிகரிக்கவும் வீட்டில் மணி பிளாண்ட்டை வைக்கின்றார்கள்.
ஆனால் இந்த தாவரத்தை வீட்டில் தவறான திசையில் வளர்ந்தால் நிதி ரீதியான பாதக விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பொதுவாக, வீட்டில் வைத்துள்ள மணிபிளாண்ட் வளர வளர, வீட்டில் செல்வம் பெருகும் என்றும் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனவும் வாஸ்து நிர்ணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மணி பிளாண்டின் தண்டுகள் ஒருபோதும் தரையைத் தொடும் படி வைக்க கூடடாது. அவ்வாறு தரையில் பட்டால் பாரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.
அது மாத்திரமன்றி மணி பிளாண்டடின் இலைகள் காய்ந்தாலோ அல்லது மஞ்சள் நிறமாக மாறினாலோ உடனடியாக அவற்றை அதிலிருந்து நீக்க வேண்டியது அவசியம்.இதுவும் பணபற்றாக்குறையை ஏற்படுத்தும்.
தவறுதலாக கூட வடகிழக்கு திசையில், மணி பிளாண்ட்டை வைக்கவே கூடாது. அவ்வாறு வைப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிப்பதுடன் நிதி ரீதியில் அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
தென்கிழக்கு திசைதான் மணி பிளாண்ட் நடுவதற்கு மிகவும் உகந்த திசையாகும். ஏனெனில், இந்தத் திசை விநாயகரின் திசையாகக் கருதப்படுகிறது.
இந்த திசையில் மணி பிளாண்ட் வைப்பதால், வீட்டில் செல்வ செழிப்பு நிறைந்திருக்கும். அதனால் வட்சுமி தேவியின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும் எனவும் நம்பப்படுகின்றது.