ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கிரீமியா, பெல்கோரட் மற்றும் கிரான்ஸ்னடர் ஆகிய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இராணுவம் நவீன ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்கள் அனுப்பியும் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வான்பாதுகாப்பு தளவாடங்கள்
இதன்போது ரஷ்யாவின் வான்பரப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைன் இராணுவ தளவாடங்களை ரஷ்யாவின் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 9 ஏவுகணைகள், 61 ஆளில்லா விமானங்களை ரஷ்யாவின் வான்பாதுகாப்பு தளவாடங்கள் வானில் இடைமறித்து தகர்த்தெறிந்தன.
உக்ரைன் மீதான ரஷ்யா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளின் இராணுவமும் தாக்குதலை அதிகரித்து வருவதால் போர் தீவிரம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.