நடிகை கிரிதி சனோன் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த 1 நேனொக்கடினே படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன்பின் பாலிவுட்டில் அறிமுகமான இவர் தொடர்ச்சியாக ஹிந்தி படங்களிலேயே நடித்து வந்தார்.
மேலும், பாலிவுட்டில் இவர் நடிப்பில் வெளியான தில்வாலே திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். ரசிகர்கள் எதிர்ப்பாக்கும் கவர்ச்சி நிறைந்த நடிப்பால் பல படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், நடிகை கிருதி சானோன் சமுக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் ஷாக்காக்கி உள்ளது. அந்த புகைப்படத்தில் தனது முதுகில் ‘V’என பச்சை குத்தியுள்ளதை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். மேலும் அதில் “இது புதிய ஆரம்பத்தின் தொடக்கம்” என கேப்ஷன்போட்டுள்ளார்.