லண்டனில் சிங்கப்பூரை சேர்ந்த மாணவர் கொரோனா வைரஸ் தொடர்பில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த ஜோனாதன் மோக் என்ற மாணவர் பேஸ்புக்கில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு அடிவாங்கி வீங்கி போன கண்களுடன் உள்ள தனது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
அதில், நான் லண்டனில் தங்கி இரண்டாண்டுகளாக படித்து வருகிறேன்
கடந்த 24ஆம் திகதி இரவு 9.15 மணிக்கு ஆக்ஸ்வெர்ட் தெருவில் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது கும்பலாக ஆண்கள் வந்தார்கள்.
என்னை பார்த்ததும் அதில் ஒருவன் ”கொரோனா வைரஸ்” என்று கத்தினான். பின்னர் அந்த கும்பல் என்னிடம், நீ எப்படி எங்களை பார்க்கலாம் என கூறியவாறே முகத்தில் குத்தினார்கள்.
The spread of coronavirus has resulted in panic across the world — with people debating as to the severity of the…
Publiée par Jonathan Mok sur Lundi 2 mars 2020
அதை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்ற நிலையில், கும்பலை சேர்ந்த ஒருவன், என் நாட்டில் உங்கள் கொரோனா வைரஸ் வருவதை நாங்க விரும்பவில்லை என கூறியவாறே மீண்டும் முகத்தில் குத்தினான்.
பொலிசார் அங்கு வருவதற்குள் அவர்கள் தப்பிவிட்டனர்.
பின்னர் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன், அங்கு என் முகத்தில் எலும்பு முறிவுகள் இருப்பதாகவும், எலும்புகளில் சிலவற்றை சரிசெய்ய மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்.
வெறுமனே, தோலின் நிறம் காரணமாக, எந்தவொரு வடிவத்திலும், உடல் ரீதியான மற்றும் இனவெறி தாக்குதலை நடத்துவது எப்படி சரியாகும்?
யாராவது என்னை நோக்கி ஒரு இனவெறி கருத்து தெரிவிக்கும் போது நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்.
இனவெறியர்கள் தொடர்ந்து தங்கள் வெறுப்பை வெளிப்படுத்த சாக்குப்போக்குகளைக் கண்டுபிடிப்பார்கள்.
கொரோனா வைரஸின் தாக்கம் அவர்களுக்கு இன்னொரு காரணத்தை கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மாணவர் தன்னை தாக்கிய நபர்கள் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தாலோ தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.