நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். நடிகை காயத்ரி ரகுராம் பாரதிய ஜனதாக கட்சியில் இருக்கிறார். நாட்டு நடப்புகள் குறித்து இருவரும் அடிக்கடி டுவிட்டரில் மோதிக் கொள்வார்கள். இந்த முறை கொஞ்சம் ஓவராக மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், பாரத பிரதமர் மோடி அவர்கள் கடந்த நாட்களுக்கு முன் சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து வெளியேறி விடலாம் என நினைக்கிறன் என்று கூறியிருந்தார்.
இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில், பிரதமரின் இந்த முடிவை கலாய்க்கும் விதமாக நடிகை குஷ்பு ” நான் அடுத்த ஞாயிற்று கிழமை ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை விட்டு விடலாம் என நினைக்கிறேன்.” என கூறியிருந்தார்.
இதனை பார்த்த காயத்ரி ரகுராம். நல்லது, கொழுப்பு குறையும் என சீனியர் நடிகை குஷ்பு எனவும் பதிலடி கொடுத்துள்ளார். குஷ்புவை காயத்ரி ரகுராம் கலாய்ததை பார்த்த நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகிறார்கள்.