கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரவமாக பரவி வரும் நிலையில், மலேசியா அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கு உலகசுகாதார அமைப்பு மற்றும் அண்டை நாடுகள் அதனை பாராட்டி வருகின்றன.
சீனவில் துவங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. இருப்பினும் சீனாவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், வெளியில் பல்வேறு நாடுகளில் இதன் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.
அந்த வகையில், மலேசியாவில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மலேசியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36-ஆம் உயர்ந்துள்ளது.
மலேசியாவைப் பொறுத்தவரை கடந்த மாதம் 25-ஆம் திகதி தான் கொரோனா பாதிப்பு உள்ள முதல் நபர் அடையாளம் காணப்பட்டார். அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வந்தது.
ஒருமுறை மட்டுமே அதிகபட்சமாக ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பிப்ரவரி 16-ஆம் திகதி வரை 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு 11 நாட்களுக்கு வேறு யாரும் பாதிக்கப்படவில்லை.
இதனால் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலை தடுக்க மலேசிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டியது. அண்டை நாடுகளும் மலேசியாவை பாராட்டின.
தேவையற்ற பயணத் தடைகளை விதிப்பது, மக்கள் மத்தியில் கிருமித்தொற்று குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று மலேசிய அரசு நடந்து கொள்ளவில்லை. அதேசமயம் உண்மை நிலவரத்தை வெளிப்படையாக அறிவித்து வந்தது.
As of 3pm, 3rd March, 7 new cases of the #COVID19 reported in Malaysia, bringing the total to 36 cases. All 7 cases are the close contacts of case 26. Of 36 cases, 14 cases are being treated at Sg Buloh Hosp. & HKL. All patients are in stable condition. 22 have been discharged pic.twitter.com/Bu9YkGIjJS
— Noor Hisham Abdullah (@DGHisham) March 3, 2020
ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மார்ச் 3-ஆம் திகதி ஒரே நாளில் மலேசியாவில் புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் புதிய பிரதமர் மொகிதின் யாசின் கொரோனா விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 22 பேர் சிகிச்சைக்குப் பிறகு பாதிப்பில் இருந்து தப்பியுள்ளனர்.
தற்போது 14 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது என மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கொரோனா கிருமித் தொற்று குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என மலேசிய அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
மேலும், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள கே.எல்.சென்ட்ரல் என்ற பகுதியில் ரயில், பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன.
அங்கு செயல்படும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், அப்பகுதிக்குச் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
ஆனால், இது வதந்தி மலேசிய சுகாதார அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.