இரண்டு வகையான கொரோன வைரஸ்கள் உலகை தாக்கி வருகின்றன என சீனாவின் விஞ்ஞானிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் குறித்த தங்கள் ஆய்வின் ஆரம்பகட்ட அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் மூர்க்கமான புதிய வைரசே – எல்வகை- ஆய்வு செய்யப்பட்ட 70 வீதமான ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
மற்றைய வைரஸ்- எஸ் வகை 30 வீதமான ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலாவது வகை வைரஸ் வுகானில் ஆரம்ப நாட்களில் காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் ஜனவரிக்கு பின்னர் இது பரவும் வேகம் குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது வகையான வைரஸ்களே தற்போது அதிகம் பரவுகின்றன இவை கொரோனாவின் பழைய வடிவத்தை கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்துள்ள சீன விஞ்ஞானிகள் எல் வகை வைரஸ்களினால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் அறிகுறிகளை கண்டுபிடிப்பது சுலபம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்கள் ஆய்வு மரபணு வரிசையில் ஏற்படும் மாற்றங்கள்,மறுசீரமைப்பு மற்றும் இயற்கை தேர்வு காரணமாக புதிய வேறுபாடுகள் உருவாகியிருக்கலாம் என எங்கள் ஆய்வுகள் தெரிவித்துள்ளன எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மரபணு தரவு தொற்றுநோயியல் தரவு மற்றும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் மருத்துவ அறிகுறிகளின் விளக்க பதிவுகள் குறித்து உடனடி முழுமையான ஆய்வுகள் அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.