எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள் வெற்றிபெறுவது உறுதியான விடயம் என்று கௌரவ மின்சக்தி இராஜாங்க அமைச்சர் திரு. மஹிந்தானந்த அழுத்கமகே அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (04) கண்டி நாவலப்பிட்டி முஹிதீன் ஜும்மா பள்ளியில் கௌரவ மின்சக்தி இராஜாங்க அமைச்சர் திரு. மஹிந்தானந்த அழுத்கமகே அவர்களின் 30 ஆண்டு கால அரசியல் வாழ்வு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரு பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் கண்டியில் போட்டியிடும் திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களே உங்களின் எதிர்கால தலைவர்.
அவரை பாராளுமன்றம் அனுப்புவதில் உங்களின் முழுமையான பங்களிப்பை வழங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற வேட்பாளர் திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள், உடுநுவர பிர்தேச சபை உறுப்பினர், திரு. ஏ.ஜி.எம். ரிஸ்வி அவர்கள் உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் திரு. மதீனம் அவர்கள், கௌரவ உலமாக்கள், பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.