கொழும்பில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (25) என்பவருக்கே கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் அவர் திருச்சி அரசு வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிவிடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
இவரின் இரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவில் அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா, இல்லையா? என்பது உறுதி செய்யப்படும்.