இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது அது எப்படி பரவியது என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவாமல் இருந்த நிலையில், நேற்று மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அது கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
இது குறித்து, கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க உளவுத்துறை முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிட்டு இருந்தது.
அதில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்தது.
இந்தியாவில் உள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உளவுத்துறை இந்த எச்சரிக்கையையே விடுத்து இருந்தது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு உளவுத்துறை அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்தது
இந்தியா மீது அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுக்க நிறைய காரணம் இருந்தது. முதலில் இந்தியாவில் இருக்கும் அதிகமான மக்கள் தொகை இதற்கு ஒரு காரணம்.
அதேபோல் சீனாவிற்கு மிக அருகில் இந்தியா இருக்கிறது. சீனாவில் இருந்து பலர் கடந்த சில மாதங்களில் இந்தியாவிற்கு பயணித்து இருக்கிறார்கள். அதேபோல் நோய் தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் இருந்து இந்தியாவிற்கு பலர் வந்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது. அதே சமயம் இந்தியா இதற்கு எதிராக என்ன செய்யும் என்றும் உளவுத்துறை அச்சம் தெரிவித்துள்ளது.
இந்தியா இதை எப்படி எதிர்கொள்ளும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்தது. இந்தியர்கள் அதிகம் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி உள்ளது. முக்கியமாக இந்தியா இதில் அலட்சியமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்கா எச்சரித்தது.
தற்போது அமெரிக்க உளவுத்துறை அறிவித்தது போலவே இந்தியாவில் வேகமாக இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்டது.
டெல்லியில் மட்டும் 6 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க எச்சரித்தது போலவே இந்திய அதிகாரிங்களின் கவனக்குறைவால் இந்த வைரஸ் இந்தியாவிற்குள் பரவி இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லியில் மற்றும் ஹைதராபாத்தில் வைரஸ் பரவியதற்கு காரணம் விமான நிலைய அதிகாரிகளின் கவனக்குறைவு தான் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அதே போன்று பெங்களூருவில் ஹாங்காங்கில் இருந்து வந்தவரை சோதிக்காமல் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதித்தது முதல் தவறு. அதேபோல் இத்தாலியில் இருந்து டெல்லி வந்தவரை சோதிக்காமல் அனுப்பியது டெல்லியில் வைரஸ் பரவ காரணமாக அமைத்தது.
அதன்பின் இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தற்போது இந்த வைரஸ் பரவி இருக்கிறது. சிறிய கவனக்குறைவால் இந்த வைரஸ் பரவி உள்ளது.
ஏற்கனவே உலக நாடுகளில் தங்களின் உளவு அதிகாரிகளை, அமெரிக்கா அனுப்பி உள்ளது. அந்த நாடுகள் எப்படி கொரோனவை எதிர்கொள்கிறது.
இது தொடர்பாக எதையாவது மறைக்கிறதா என்று இவர்கள் தகவல் அளித்து வருகிறார்கள். கொரோனா இந்தியாவில் எப்படி தடுக்கப்படுகிறது என்பதையும், அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.