மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் தங்கம் தயாாிக்கும் தொழிற்சாலையிலிருந்து 11 இந்தியபிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாாிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கைதான 11 பேரும் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்ததுடன், குறித்த தங்கம் தயாாிக்கு ம் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனா்.
கைது செய்யப்பட்டவா்கள் 23 தொடக்கம் 40 வயதுக்கு இடைப்பட்டவா்கள் என கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவா்களின் விசாரணைகள் நடாத்தப்படுவதுடன், அவர்கள் மீது சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.