கட்சிக்குள் பாரிய நெருக்கடி தலைவிரித்தாடிவரும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு டுபாய் சென்றுள்ளார்.
எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான EK-655 ரக விமானத்தில் அவர் நேற்று இரவு 10 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டு சென்றுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய நெருக்கடி தலைவிரித்தாடிவரும் நிலையில் கட்சியின் தலைவர் ரணில், இந்த வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.