ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கதள்தின் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் லலித திசாநாயக்கவும் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.M.P.B. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வௌிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்மிக குமாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 78 பேர் சாட்சியமளித்துள்ளனர்.
ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் 2 இடைக்கால அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.