இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதை அடுத்து தலைநகர் டெல்லியில் அனைத்து தனியார் மற்றும் அரசு பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 30 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 29,000 பேர் கொரோனா வைரஸ் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் செயல்பட்டுவரும் 5ஆம் வகுப்பு வரையான தனியார் மற்றும் அரசு பாடசாலைகளுக்கு மார்ச் 31 ஆம் திகதி வரை விடுமுறை அளித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை அல்லது அறிவிப்பு மார்ச் 31 ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.