இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் அரையிறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் வரலாற்றில் முதன் முறையாக டி-20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மகளிர் அணி தகுதிப்பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் அரையிறுதிப்போட்டி சிட்னி நகரில் நடைபெறவிருந்த நிலையில், தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.
இதனால், குரூப் சுற்றில் அதிக வெற்றிப்பெற்ற அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நிலை ஏற்பட்டது.
அதன்படி, குரூப் சுற்றில் விளையாடிய நான்கு போட்டியிலும் வெற்றிப்பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.
https://twitter.com/T20WorldCup/status/1235536915300048896
இந்தியாவை விட அதிக ‘ரன் ரேட்’ வைத்திருந்தாலும் குரூப் சுற்றில் விளையாடி நான்கு போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வென்றது. தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
சிட்னி மைதானத்தில் நடந்த இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பரிக்காவை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா-இந்திய மோதவுள்ளது.
2020 உலகக் கோப்பை தொடரில் நடந்த முதல் குரூப் சுற்று போட்டியில் அவுஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது நினைவுக்கூரத்தக்கது.