சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக சீனா, தென்கொரியா, பிரான்ஸ், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
சீனாவில் இந்த நோயின் தாக்கம் குறைந்தாலும், மற்ற நாடுகளில் தீவிரவமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை உலக அளவில் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.
இந்நிலையில் தற்போது சுவிட்சர்லாந்தில் 74 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த செவ்வாய் கிழமை Vaud-ல் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சமீபநாட்களாக சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாட்டில் இருக்கும் 26 மண்டலங்களில் மொத்தம் 79 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே இரவில்,Schwyz மற்றும் St Gallen ஆகிய இடங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதே போன்று செவ்வாயன்று சூரிச்சில் ஏழு பேருக்கும், அவற்றுடன் Freiburg,Bern,Grisons, Basel,Neuchatel,மற்றும் Vaud ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்று, நாட்டில் தற்போது எந்த மண்டலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது மற்றும் இல்லை என்பதை வரைபடத்துடன் வெளியிட்டுள்ளது.