வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இரு சந்தர்ப்பங்களில் மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று பிற்பகல் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 500 கிராம் கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மாலை வேளையில் புதிய பேருந்து நிலையத்தில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் பயணி ஒருவரின் பையில் இருந்து 1.9 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார் விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.