20ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இறுதி போட்டியில் தகுதிபெற்ற இந்திய பெண்கள் அணிக்கு விராட்கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து இடையோயான முதல் அரையிறுதிப்போட்டி சிட்னி நகரில் நடைபெறவிருந்த நிலையில், தொடர் மழை காரணமாக போட்டிக்கு தகுதி பெறும் நிலை ஏற்பட்டது.
அதன்படி குரூப் சுற்றில் விளையாடிய நான்கு போட்டியிலும் வெற்றிப்பெற்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.
இதற்கு இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணித்தலைவர், விராட்கோஹ்லி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “இறுதிசுற்றை எட்டிய இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள். உங்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இறுதிப்போட்டியிலும் சாதிக்க வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/imVkohli/status/1235443841693626368
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், “லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் பெற்ற வெற்றிக்கு கிடைத்த பரிசு இது. இந்த ஞாயிற்றுக்கிழமை மகுடம் சூடவதற்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Would have loved seeing the semi-finals but Indra Devta ke aage kaun jeet sakta hai.
Mehnat ka parinaam achha milta hai. A reward for Winning all the matches in the group stage. Congratulations @BCCIWomen and wishing you glory this Sunday #T20WorldCup— Virender Sehwag (@virendersehwag) March 5, 2020
விராட்கோஹ்லியின் மனைவியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா டிவிட்டர் பக்கத்தில், “மிகச்சிறந்த ஆட்டத்தை பார்க்க உற்சாகமாக இருந்த நிலையில் மழை புகுந்து பாழ்படுத்திவிட்டது. அடுத்த 8ஆம் திகதி நடக்கும் இறுதி ஆட்டத்தை காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/AnushkaSharma/status/1235441709926019072