சினிமாவில் மற்ற ஹீரோக்களிடமிருந்து வித்தியாசப்பட்டு மக்கள் மனங்களை கவர்ந்தவர் நடிகர் முரளி. அவரின் வாரிசாக நடிகர் அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானார்.
பின் அவருக்கு பாலா இயக்கத்தில் வந்த பரதேசி படம் அவருக்கு புதிய பரிமாணத்தை தந்தது. தொடர்ந்து சண்டி வீரன், ஈட்டி படங்களில் நடித்து வந்த வர் இமைக்கா நொடிகள் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார்.
ஒரு நல்ல ஹிட் படம் கொடுக்க போராடி வரும் அவர் குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக அவர் ரவிந்திர மாதவா இயக்கத்தில் நடித்து வருகிறாராம்.
இப்படத்தில் நடிகை லாவண்யா கமிட்டாகியுள்ளார்.