இலங்கை பாதுகாப்பு படையினர் வன்முறை குழுக்களுடன் இணைந்து வழிபாட்டு தலங்களை தாக்கியதாக குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி அஹமத் ஷாஹித், ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பித்துள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பல பொய்யான தகவல்கள் அடங்கியுள்ள இந்த அறிக்கையில் பௌத்த பிக்குகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த அறிக்கை கடந்த இரண்டாம் திகதி மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி அஹமத் ஷாஹித், மாவனெல்லையில் புத்தர் சிலை உடைக்கப்பட்டமை, அந்த பிரதேசத்தில் இடம் ஒன்றில் வெடிப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவங்களை தனது அறிக்கையில் உள்ளடக்கவில்லை.
இந்த அறிக்கையை நிராகரித்து உரையாற்றிய ஜெனிவாவுக்கான பதில் நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ், இந்த அறிக்கை தவறானது எனக் கூறியுள்ளார்.