வடமராட்சி கிழக்கு கோவில் பகுதியில் கடந்த நான்காம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரை நீதிமன்றத்தில் முற்படுத்தவில்லை என தெரிவித்து மனித உரிமை ஆணைக் குழுவில் நேற்று முன்தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா உதய சிவன் (39) என்பவர் கடந்த 4ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் தனது கணவர் இன்று வரை நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை என தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கைதானவரின் மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை பகல் வேளைகளில் கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தி வருவதுடன் இரவு நேரத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.