கனடாவின் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றிற்கு இலக்கான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒன்ராறியோவில் லாஸ் வேகாஸில் ஒருவர் மற்றும் கலிபோர்னியாவில் ஒரு ஜோடி உட்பட ஆறு பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒன்ராறியோவில் மொத்தம் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.