நடிகை ரஷாமி தேசாய் குஜராத்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்து வந்துள்ளார். அதன்பின் ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங் 2 படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அதைத்தொடர்ந்து அதிகமான ஹிந்தி சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார் ரஷாமி. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 13ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
மேலும், 2012ம் ஆண்டு தன்னுடன் சீரில்களில் நடித்த நந்திஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரஷாமி, திருமணமான மூன்றே ஆண்டுகளில் அவரை விவகாரத்து செய்தார். தற்போது படவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ரஷாமி பிரபல இயக்குனர் மீது கூறியுள்ள மீ டூ குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது, ”தனக்கு 16 வயது இருக்கும் போது, தனது முதல் பட இயக்குனர் சூரஜ் என்பவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார். அதற்கு நான் பிடிகொடுக்கவில்லை என்பதால் என்னை ஆடிஷன் இருப்பதாக தனியாக வரவழைத்து, நான் குடித்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, என்னை இரண்டரை மணி நேரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
பின்னர் அவரிடமிருந்து தப்பித்து எனது அம்மாவிடம் இதுபற்றி கூறினேன். அந்த இயக்குனரை விடுதிக்கு வரவழைத்து எனது அம்மா அவரின் கன்னத்தில் ஒங்கி அரைந்தார். 16 வயதில் தனக்கு நடந்த கொடூரமான அனுபவத்தை கூறியதால் பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.