பிரான்சில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டி சென்றுள்ளதால், நாட்டின் எட்வார்ட் பில்ப், ஒய்ஸ் மற்றும் ஹாட்ரிஹினில் கல்வி நிறுவனங்களை மூடும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இத்தாலி, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தீவிரவமாக பரவி வருகிறது.
இந்நிலையில் பிரான்சில் புதிதாக 190 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 613-ஐ தொட்டுள்ளதாகவும், மொத்தம் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும் நேற்று சுகாதார இயக்குனர் Jérôme Salomon தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 39 பேரின் நிலை, மிகவும் மோசமாக இருப்பதாகவும், பிரான்சின் அனைத்து பகுதிகளும் இப்போது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்(Guadeloupe, Guyana மற்றும் Martinique) குறிப்பிடப்பட்டுள்ளது.
Oise மற்றும் Haut-Rhin-ன் உள்ள நர்சரிகள் மற்றும் பள்ளிகள் வரும் திங்கள் முதல் பதினைந்து நாட்களுக்கு மூடப்படும். எனவே, இந்த இரண்டு துறைகளிலும், கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதற்கு பிரதமர் இந்த உத்தரவை நேற்று பிறப்புத்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட இந்த பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால், இங்கு கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது, ஆபத்தானவை என்று காரணம் அல்ல, பள்ளி சூழலில் பரவும் அபாயம் அதிகம் என்பதால் இந்த அறிவிப்பு என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.