இத்தாலியின் முக்கிய அரசியல் கட்சி தலைவரான Nicola Zingaretti தாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் பெருவாரியான பிராந்தியங்களை அதிரடியாக தனிமைப்படுத்தியுள்ளது இத்தாலிய நிர்வாகம். இப்பகுதிகளில் சுமார் 16 மில்லியன் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இத்தாலியின் இடதுசாரி கட்சியின் தலைவரான Nicola Zingaretti தாம் கொரோனா பாதிப்புக்கு இலக்கானதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் நலமாக இருப்பதாகவும் பயப்படும் கட்டத்தில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது குடும்பத்தினரும், சமீப நாட்களில் தம்முடன் நெருங்கி பழகியவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் உள்ள Lazio பிராந்தியத்தின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்துவரும் Nicola Zingaretti, பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும், உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.
இத்தாலியில் இதுவரை 5,883 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். மேலும், 233 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனனர் என உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.