கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஹொட்டல் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
Quanzhou நகரில் உள்ள ஐந்து மாடி Xinjia ஹொட்டல் கட்டிடம் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 7.15 மணிக்கு இடிந்து விழுந்தது.
இந்த ஹொட்டலில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 71 பேர் மற்றும் மேலும் பலரும் இருந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது ஹொட்டல் கட்டிடத்தில் சில சீரமைப்பு மற்றும் அலங்கார வேலைகள் நடந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Latest on hotel collapse in Quanzhou: https://t.co/vxf7kVwySn
– 4 people were confirmed dead as of 10:30 a.m. Sunday
– A boy aged around 2 was rescued in the early hours of the morning pic.twitter.com/lIC6ENmjNJ— China Xinhua News (@XHNews) March 8, 2020
முதல் மாடியில் சூப்பர் மார்கெட்டை மறுசீரமைக்கும் பணியும் நடந்து வந்தது.
கட்டிடம் இடித்த பின்னர் உள்ளே சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது.
தற்போது வரை 49 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 2 வயது சிறுவனை அவசர உதவி குழுவினர் மீட்டு ஆம்புலன்ஸில் எடுத்து செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் 36 அவசர ஊர்த்தி வாகனங்கள், 67 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 700 தீயணைப்பு வீரர்கள் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Latest on hotel collapse in east China's Quanzhou: https://t.co/hjaOGbeYCK
– Collapsed building owner has been put under police control
– Whether the collapse was due to house decoration or structural problem needs further investigation pic.twitter.com/e8jY8eykyf— China Xinhua News (@XHNews) March 8, 2020