கனடாவில் உயர் கல்வி பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று கனடாவில் உயர் கல்வி பெற்றுத் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்தல் மற்றும் விளம்பரப்படுத்தி வந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அங்கு சேவையாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மொரட்டுவ – அகுலானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது 30 போலி கடவுச்சீட்டுக்கள், போலியாக தயாரிக்கப்பட்ட 35 ஆவணங்கள், இரண்டு கணனிகள் மற்றும் அச்சு இயந்திரங்கள், தொலைபேசிகள் உள்ளிட்ட போலி அதிகாரபூர்வ முத்திரையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர்கல்வி வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து குறித்த நிறுவனம் 15 இலட்சத்திற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.