தமிழில் தற்போது நிகழும் மாசி மாதத்தின் பௌர்ணமி நாள் நாளை அதாவது மார்ச் 9 ல் வருகிறது. மற்ற மாத மாதங்களை விட மாசி பௌர்ணமி மிகுந்த சிறப்பு பெறுகிறது.
விடயம் யாதெனில் மாசியின் முக்கிய நட்சத்திரமான மகத்தின் அதிபதி கேது பகவான், இவர் ஞானத்தையும், மோட்சத்தையும் அளிப்பதோடு, செல்வத்தையும் தருபவர்.
மாசி மாததில் வரும் முழு நிலவாக பௌர்ணமியாக பூரண சந்திரனாக அமையும் நாள் மகம் நட்சத்திர நாள். பௌர்ணமி நாளில் கிரிவலம் வருதல் சிறப்பான பலன்களையும் தேக நலத்தையும், மன தெளிவையும் கொடுக்கும்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியை காணலாம். அதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நம் மனிதப்பிறவியின் கர்ம வினைகள் தொலைந்து போகும் என்பது ஐதீகம்.
பின் பிறவா நிலையாகிய முக்தியை அது அளிக்குமாம். மேலும் கணவன் மனைவி இணைபிரியாமல் வாழும் பாக்யம் பெறுவார்கள், கடன் பிரச்சனைகள் நீங்கும், தொழில் முன்னேற்றமடையலாம்.