பெண்களின் சம பங்களிப்பு அரசியலில் காணப்படுமானால் வன்முறையற்ற, மாறுபட்ட அரசியலாக அது அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் நேற்று இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 4 ஆக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.