காகித பணத்தின் மூலமாக கூட கொரோனா வைரஸ் பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி, தொடர்பு இல்லாத பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.
கோவிட் -19 வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000 ஐ தாண்டியிருப்பதோடு, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,600 ஐ எட்டியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மற்ற மேற்பரப்புகளில் படிந்திருப்பதை போலவே கொரோனாவும், பணத்தாள்களின் மேற்பரப்பில் பல நாட்களுக்கு படிந்திருக்கலாம். அதனால் பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்திய பின்னர் கைகளை கழுவுமாறு சர்வதேச அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
முடிந்தவரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளது.
அண்டார்டிகாவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிக அளவை எட்டியிருப்பதாக சமீபத்திய சுகாதார அறிக்கை தெரிவித்துள்ளது.