த.தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களின் கடுமையான எதிர்ப்புக்களை புறம்தள்ளி சுமந்திரன் என்ற தனி நபரால் மட்டக்களப்பு வேட்பாளர் பட்டியலில் பெரிடப்பட்ட நளினி இரட்ணராஜா என்ற பெண் குடிபோதையில் உளறிக்கொட்டிய வீடியோ ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் தான் பொலிசாருடன் இணைந்து வேலை செய்ததையும், ஐந்து பொலிஸ் அத்தியட்சகர்களைச் சந்தித்ததையும் நளினி குடிபோதையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
நளினி என்ற பெண் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவால் ஐ.நாவுக்கு அனுப்பபட்டவர் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கிருபாகரன் குற்றம்சுமத்தியுள்ள நிலையில், நளினி சிறிலங்கா பொலிசாருடன் சேர்ந்து இயங்கியதாகக் கூறும் வீடியோவும் வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இலங்கை புலனாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கிய ஒருவரை என்ன நோக்கத்திற்காக சுமந்திரன் கூட்டமைப்பிற்குள் களமிறக்கினார் என்ற கேள்வி கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இதேவேளை சுமந்திரனும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றாரா என்கின்ற சந்தேகமும் கூட்டமைப்பின் தோழமைக்கட்சிகளால் எழுப்பப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.