இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியினர் இன்று சாத்தியக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த எதிர்ப்பு நடவடிக்கையானது யாழ்ப்பாணம் தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யுத்த வடுக்கள் ஆறாத யாழ்.மண்ணில் எத்தனையோ பெறுமதியான பெண்கள் இருக்கும் சந்தரப்பத்தில் அவர்களில் இருந்து யாரையும் தெரிவு செய்யாது கொழும்பிலிருந்து பெண் வேட்பாளர்களை நியமித்துள்ளனர்.
யாழில் இறங்குமதி வேட்பாளரை கூட்டமைப்பு சார்பில் வேட்பாளராக நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
தற்போதைய சூழலில் தமது மாவட்டத்தில் உள்ள பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் இந்த சாத்தியக்கிரக போராட்டத்தை முன்னெடுப்பதாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.