கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மொத்தமாக முடக்கிவைக்கப்பட்டுள்ள இத்தாலியின் வடக்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் புரட்டிப்போட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அஞ்சி குடியிருப்புக்குள் முடங்கிப் போன மக்கள், இதனால் அலறியடித்துக் கொண்டு தெருவில் குவிந்துள்ளனர்.
ரிக்டர் அளவில் 2.6 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சேதம் ஏற்பட்டதாக ஆரம்பத்தில் எந்த அறிக்கையும் இல்லை,
இருப்பினும் Camaiore மற்றும் அருகிலுள்ள Viareggio பகுதியில் உள்ள மக்கள் அதிர்வுகளை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு இத்தாலியில் இதுவரை 463 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில்,
பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,172 என பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு தோன்றிய சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது இத்தாலி.
இதனிடையே ‘குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எல்லோரும் எதையாவது விட்டுவிட வேண்டும் என்று பிரதமர் Giuseppe Conte நேற்று இரவு அறிவித்துள்ளார்.
கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் அவசர தேவை இன்றி குடியிருப்பில் இருந்து வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் திருமணம், இறுதிச்சடங்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என பொதுமக்கள் கூடும் அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று அதி வேகமாக பரவுவதால், மருத்துவர்களுக்கு உறுதியான முடிவெடுக்க முடியவில்லை என தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகள் குறித்து உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 20,000 ஊழியர்களுடன் சுகாதார சேவையை விரைவாக உயர்த்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக ஓய்வு பெற்ற மருத்துவர்களை அரசாங்கம் திரும்ப அழைக்கத் தொடங்கியுள்ளது.