தமிழில் 1991ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசுனிலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீனா.
இதற்கு முன்பு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். ஆம் இவரை நாம், ரஜினி நடித்து வெளிவந்த அன்புடன் ரஜினி எனும் திரைப்படத்தில் கூட குழந்தை நட்சித்திரமாக பார்த்திருப்போம்.
இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார் நாடியாகி மீனா.
இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் தளபதி விஜய்யுடன் நெஞ்சினிலே படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் நடனமாடி உள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம் அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக அனைவரையும் ஆச்சிரிய படுத்தும் விதத்தில் தெரிகிறார் நடிகை மீனா.
மேலும் இவர் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram