ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தனித்து போட்டியிடுவது சம்பந்தமாக இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.
நாளைய தினம் கட்சியின் மத்திய செயற்குழு கூவுள்ளது. அந்த கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக சரியான முடிவு எடுக்கப்படும்.
தனித்து போட்டியிடுவதன் மூலம் எந்த அழுத்தங்களும் ஏற்படாது. சுமார் 25 ஆசனங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றும். தேர்தலின் பின்னர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேஷல ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.