வெளிநாட்டுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் பலர், கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து கொரோனா பரிசோதனை நிலையங்களுக்கு செல்ல மறுப்பு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று புதன்கிழமை அதிகாலை வந்தடைந்த இலங்கையர்கள் சிலர், அங்குள்ள அதிகாரிகளிடம் வாய்த்தர்க்கம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து இன்று அதிகாலை வந்த 300 பேர் மட்டக்களப்ப ஷர்யா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பிவைக்க கட்டுநாயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட குறிப்பிட்ட சிலர், தங்களுடைய வீடுகளில் சென்று மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொள்வதாகவும் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக சிறிதுநேரம் விமான நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.