எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன நிதாஹஸ் பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ளார்.
அவர், குருநாகல் மாவட்டத்திலேயே இம்முறையும் போட்டியிடவிருக்கின்றார்.
இதேவேளை கடந்த முறையும் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட நிலையில் மீண்டும் அவர் அங்கு களமிறங்கவுள்ளார்.
இதன் போது, ஜனாதிபதி கோத்தாபயவும் இருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இரு கைகளையும் குவித்து வணங்கி கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.